கோவை பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கோபால் (வயது 59) கூலி தொழிலாளி..நேற்று பீளமேட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் லாரியில் இருந்து மரப்பலகைகளை (பிளைவுட்) இறக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பலகைகள் சரிந்து கோபால் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.. இது குறித்து அவரது மகன் நாகராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.. போலீசார் அந்த கல்வி நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் சுப்பிரமணி, லாரி டிரைவர் சத்யராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரியில் இருந்து பிளைவுட் இறக்கும் போது மரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி – 2 பேர் மீது வழக்கு..
