சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த தொழிலாளி போக்சோவில் கைது.

கோவை ஏப் 25 கோவை மாவட்டம்,காரமடை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்துசிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர். சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயது கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இதை யடுத்துஇந்த வழக்கு மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது .மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர்.