மூன்றாம் உலகப் போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை..!

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ள அதே நேரத்தில், தன்னால் தனது ஆட்சியால் அது நிகழ்வதைத் தடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.

அனைவரும் உயிரிழப்பதைக் காண தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், அமைதியை நிலைநிறுத்துவதற்காகவும் தான் உலகம் முழுவதும் வேகமாக சுற்றிவருவதாகவும் தெரிவித்துள்ளார்..