குடிபோதையில் மோதல்,டிரைவர் அடித்து கொலை…

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பிரகாசுக்கும் அங்கு வந்த சிலருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அங்கு கிடந்த விறகு கட்டையால் பிரகாசின் தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கினார்கள். ‘இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.