கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது.கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, எஸ்.என் . எஸ் கல்லூரி கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் இந்த தேர்வு நடந்தது.கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வில் பெண்கள் மட்டும் பங்கேற்றனர். 4 மையங்களிலும் மொத்தம் 7800 பேர் எழுத்து தேர்வு எழுதுகிறார்கள்..காவல்துறை பணியில் இருப்பவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று மதியம் நடக்கிறது.இந்த 4 மையங்களுக்கான” சூப்பர் செக்கிங்” அதிகாரியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 4 மையங்களுக்கும் சென்று எழுத்து தேர்வு நடப்பதை நேரில் பார்வையிட்டார்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுப்போட்டி உடற்கூறு,,உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்படும்.எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வு – 7805 பேர் எழுதுகிறார்கள்..!
