2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ‘ஏறு தழுவல்’ என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர். ஜனவரி மாதம் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வோரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் முதலில் தொடங்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், மாடு பிடிவீரர்களும் போட்டிக்காக மூழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வாடிவாசலையும், அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.