கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை. 3பேர் கைது…

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் நால்ரோடு பகுதியில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்யப்படுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) கைது செய்யப்பட்டார். லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கே.ஜி. சாவடி போலீசார் வாளையார் சோதனை சாவடி அருகே நடத்திய சோதனையில் கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக செட்டிபாளையம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ( வயது 48) கைது செய்யப்பட்டார். 15 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. நவக்கரை பஸ் ஸ்டாப் அருகே நடந்த சோதனையில் செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 62) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 15 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.