கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டிகோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓட்டல் அதிபர்கள், மானேஜர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, தவறுகள் நடக்காமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாநகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவில், தேவாலயம், பள்ளிவாசல்களில் பலத்த பாதுகாப்பு போடப்படும்.
அவினாசி சாலை, வாலாங்குளம், ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை இடங்களில் சோதனை, மது போதையில் வாகனம் ஓட்டுதல்,புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை தடுக்க 500 மீட்டருக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும். 11 சோதனை சாவடிகள் தவிரகூடுதலாக தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்க உள்ளோம்.கூடாரங்கள் அமைத்து போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட உள்ளனர்.. மேலும் தனியார் ஓட்டல்கள், கிளப் உரிமையாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம், போக்குவரத்து நெரிசல் பாதுகாப்பு, உள்ளிட்ட விஷயங்களை அறிவுறுத்தல்கள் தெரிவிக்க உள்ளோம்.போதை பொருட்கள் ஏதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து விடாமல் இருக்க தேவையான நடவடிக்கை. கிளப், ஓட்டல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். புத்தாண்டு நாளில் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஓட்டல் விடுதிகள் நிகழ்ச்சிகளை முடித்து மூட வேண்டும். 31 ஆம் தேதி இரவு மேம்பாலங்கள் மூடப்படும், அவசர ஊர்திகள் மட்டும் அனுமதிக்கப்படும். மது போதையில் வாகன ஓட்டாமல் இருக்க ஓட்டுநர்களை நியமித்து அனுப்ப வேண்டும்.காவல் நிலையம் வாரியாக காலியாக உள்ள பொது இடங்கள் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உள்ள காலியிடங்கள் மற்றும் திடல்கள் ஆகியவற்றை கண்டறியப்பட்டுள்ளன புத்தாண்டு தினத்தன்று மேற்படி இடங்களில் தனி நபர்கள் அல்லது குழுவினர்கள் மது அருந்து வதைதடுக்கும் விதமாக சுற்றுக்காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்படும்,பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பிற குற்ற செயல்களை தடுக்கும் விதமாகவும் குறிப்பாக செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும். கோவை மாநகரில் 23 நான்கு சக்கர வாகன ரோந்துகளும், 60 இருசக்கர வாகன ரோந்ந்துகளும் ரோந்து பணியில்ஈடுபடும்.
மகிழ்ச்சியான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். விபத்து, உயிரிழப்பு இல்லாத மகிழ்ச்சியான புத்தாண்டாக அமையவேண்டும். .புத்தாண்டு கொண்டத்தின் போது நீச்சல் குளங்கள் அருகே செல்ல அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது துணை கமிஷனர்கள் சண்முகம், சந்தீஸ்,ஆகியோர் உடன் இருந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை, பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…
