புத்தாண்டு ,கொண்டாட்டத்துக்காக வனப்பகுதியில் பட்டாசு வெடிக்கவும்-கேம்ப்பயர்நிகழ்ச்சிக்கும் தடை…

கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் படி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை நடத்தக்கூடாது . கேம்ப்பயர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வாகன ஓட்டக்கூடாது. மேலும் வாகனங்களில் அதிக ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. மது குடித்துவிட்டு வனப்பகுதியில் வாகனங்கள் இயக்கக் கூடாது .மேலும் புத்தாண்டு இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்தக் கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீணாகும் உணவுப் பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை வனப் பகுதிகளில் கொட்ட கூடாது. தங்குவிடுதிகளுக்கு அருகில் வனவிலங்குகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக விரட்ட முடியாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கோவையின் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விடுதி உரிமையாளர்கள் மேற்கண்ட அறிவிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் .இல்லை என்றால் சம்பந்தப்பட்ட விடுதிகளின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது