சென்னை: வன உயிரின பாதுகாப்புக்கான முன்னணி மையமாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இம்மாதத்தில் பிறந்த உயிரினங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
ஜூலை 10, 2024 அன்று, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா ஒன்பது குட்டிகளை ஈன்றது, மறுநாள், ஜூலை 11, 2024 அன்று, மற்றொரு அனகோண்டா பதினொரு குட்டிகளை ஈன்றுள்ளது. காட்டுப்பூனை ஜூலை 13, பூனைக்குட்டிகளை ஈன்றுள்ளது.