கோவை அருகே உள்ள பி. என் .புதூர் ,ரத்தின சபாபதி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி விஜய லட்சுமி ( வயது 84 ) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 50 வயது மதிக்க ஒரு பெண் அவரது வீட்டுக்கு சென்றார் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டார் .அதற்கு விஜயலட்சுமி ஆதார் கார்டும், அட்வான்ஸ் தொகையும் கொடுத்தால் வீடு கொடுப்பதாக கூறினார். வீட்டை பார்க்க வேண்டும் என்று கூறிய அந்த பெண் பீரோவில் இருந்த ஒரு பவுன் எடை கொண்ட தங்கவளையல்களை திருடி கொண்டு நைசாக சென்று விட்டார் .இது குறித்து விஜயலட்சுமி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.
மூதாட்டியிடம் வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து நகை திருட்டு…
