சந்தன மரக் கட்டைகள் கடத்தல் 3பேர் கைது…

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோஜ் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு, இரும்பறை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காரனுர் அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 2 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை காடுகளில் வெட்டி விற்பனைக்கு கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கரட்டு மேடு ராமச்சந்திரன் ( வயது 42) காரனூர் வெள்ளியங்கிரி ( வயது 30) ஆலாங்குட்டை ராமசாமி (வயது 41) என்பது தெரிய வந்தது.”இவர்களுக்கு தலா ரூ 20 ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டது.