கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி..இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 23) தனியார் டவுன் பஸ்சில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்..அதே பஸ்சில் கார்த்திக் என்பவர் டிரைவராக பார்க்கிறார்.இவர்கள் இருவரும் நேற்று இரவுவேலை முடிந்துவடகோவை சிந்தாமணி சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்கில் பஸ்சைநிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெட்ரோல் பங்குக்கு காரில் வந்த ஒரு கும்பல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்தனர்.சத்தம் கேட்டு எழுந்த டிரைவர், கண்டக்டர் அந்த கும்பலை கண்டித்தனர்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் டிரைவரையும் கண்டக்டரையும் சரமாரியாக தாக்கியது. இதில் சந்தோஷ்குமார்,கார்த்திக் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்ஆகியோர் வழக்கு பதிவு செய்துதெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த நவ்பல் ( வயது 20) அஸ்வத் ( வயது 21 )ரஷீத் ( வயது 21) ஆரிஸ் ( வயது 20)ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் பஸ் டிரைவர்-கண்டக்டருக்கு அடி உதை. 4 பேர் கைது…
