வால்பாறை – பச்சமலை எஸ்டேட் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குட்டியானை உயிரிழப்பு…

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் தனியார் சூடக்காடு பகுதியில் மனித வன உயிரின மோதல் தடுப்பு குழுவினர் நேற்று காலை யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை கண்டறியப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வனப்பணியாளர்கள் பாதுகாப்பு பணி மேற்க் கொள்ளப்பட்டு நிலையில் பொள்ளாச்சி துணை இயக்குநர் தலைமையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், வனவர் அய்யாச்சாமி, இயற்கை வன மையம் ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுராம் ஆகியோர் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் விஜயராகவன், செந்தில் நாதன் மற்றும் மருத்துவக் குழு அடங்கிய மருத்துவக்குழுவினரால் உயிரிழந்த குட்டியானை யின் உடற்கூறு பரிசோதனைகள் மேற்க் கொள்ளப்பட்டு யானையின் உயரம், நீளம், அகலம் ஆகியவை குறிக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனையின் முடிவில் குட்டியானை யின் வயது சுமார் ஒன்றரை வயது இருக்கும் என தெரிவந்தநிலையில் உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்