ஆவடி திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஜெய் பாலாஜி என்பவர் தான் மெட்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நடத்தி வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியராக பணியாற்றிய உமர் மற்றும் செந்தில்குமார் பணியாற்றியபோது நிறுவனத்தின் தரவுகளை திருடி அயப்பாக்கத்தில் mcare pro p vt ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கார்த்திக் என்பவன் ஜெய் பாலாஜியின் மெட்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அந்த நிறுவனத்தின் தரவுகளை தனது மின்னஞ்சல் முகவரிக்கு கொள்ளையடித்த புகார் மனுவின் மீது ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களிடம் அளித்த புகார் மனுவின் மீது இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு செந்திலைப் பற்றி தகவல் சேகரிப்பதற்காக விசாரணைக்கு ஆஜராக கார்த்திகை ஆஜராகவும் அவனை விசாரணை செய்தபோது கார்த்திக் வாட்ஸப் மூலமாக செந்திலுக்கு மெட்ரோ நிறுவன தரவுகளை கடந்த பிப்ரவரி 2023 ல் அனுப்பி உள்ளதும் தொடர்ந்து செந்திலு டன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது இதனை அடுத்து கொள்ளைக்காரன் கார்த்திக் பணிபுரிந்த நிறுவனத்தின் தரவுகளை மோசடியாக கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து குற்றவாளி கார்த்திக் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பு ழல் சிறையில் அடைக்கப்பட்டான்
தரவுகளை கையாடல் செய்த கேடி கைது…
