டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து…

கோவை ஜி. என்.மில் பக்கம் உள்ள கே. என். ஜி. புதூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று பாலாஜி கார்டன் ,ஜல்லி கோரை பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே குடிபோதையில் நடந்து வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து தகராறு செய்தார் .பின்னர் பீர் பாட்டிலை உடைத்துஇவரை குத்தினார். இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார் .இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கோழி என்ற கோபிநாத், ஆசிப் ஆகியோரை தேடி வருகிறார்கள். இவர்கள் மீது கொலை முயற்சி, உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.