கோவை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டுக்காரர் மீது வழக்கு…

நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுல் ( வயது 38)இவரதுவிசா காலாவதியானபிறகு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இது பற்றி தகவல் அறிந்தததும்ரேஸ்கோர்ஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் விசா முடிந்த பிறகும் அவர் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் விசாரணை நடத்தி நைஜீரியாவை சேர்ந்த இம்மானுல் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.