வால்பாறையில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மற்றோரு அரசு பேருந்து மற்றும் டாடா சுமோ மீது மோதி விபத்து…

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டாப் பகுதிக்கு சென்று விட்டு வால்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது வால்பாறை முருகன் கோவில் இறக்கத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் செல்வக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்தது இதையறிந்த ஓட்டுனர் சாலையில் இருந்த பொதுமக்களிடம் பிரேக்பிடிக்கவில்லை பிரேக் இல்லை ஒதுங்க ஒதுங்க என்று சத்தம் போட்டுக்கொண்டே முடிந்த வரை சென்று பெடாரோல் பங்க் எதிரே சென்ற போது தவிர்க்க முடியாமல் எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்து மீது மோதியதில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக்காமலை ஜெகநாதன் என்பவரின் டாடோசுமோ மீது மோதியதில் அடுத்திருந்த மிக்சர் கடை முருகன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர்கள் உட்பட சுமார் 30 க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் பலத்த காயமடைந்த செல்வக்குமார் 38, ராமகிருஷ்ணன் 58, மிக்சர் கடை முருகன் 45 ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் வால்பாறை பகுதியில் இயக்கிவரும் மிகவும் பழுதான அரசு பேருந்துகளை மாற்றி இனிமேலும் ஏதேனும் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் அதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வால்பாறைபகுதி ஒட்டுமொத்த பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.