நடுரோட்டில் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தாக்கிய 3 பேர் கைது…

கோவை ஆர் .எஸ் . புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஆனந்த் (வயது 30) இவர் நேற்றுமேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை தடுத்து நிறுத்த முயன்றார்.அவர்கள் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போலீஸ்காரர் தனது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று அவர்களை பிடிக்க முயன்றார்.அப்போது 3பேரும் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்கினார்கள். இதை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் போலீஸ்காரர் 3 பேரையும் மடக்கி பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர்கள் செல்வபுரம்,கல்லா மேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் அமீது(வயது 25) குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஹபிப் அலி (வயது 26)செல்வபுரம் கல்லா மேடு தெற்கு ஹவுசிங் வீட்டைச் சேர்ந்த அலாவுதீன் முகமது உசேன் (வயது 25) என்பது தெரியவந்தது இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள்மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் , தாக்குதல்,கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.