கஞ்சா விற்ற பெண் கைது…

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர்நேற்று மாலையில் சின்னியம்பாளையம், சி.ஏ.பி. வீதி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படிநின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தனர். அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் சி.ஏ.பி .வீதியைசேர்ந்த ராமராஜன் மனைவி லதா மகேஸ்வரி( வயது 46) என்பது தெரியவந்தது. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது “அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.