மனைவியுடன் தகராறு. 2 குழந்தையுடன் தந்தை திடீர் மாயம்…

கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள வெள்ள மடை, செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் ( வயது 40) இவரது மனைவி பால்த்தாய் (வயது 35) இவர்களுக்கு மாரிசாமி (வயது 7) சக்திவேல் (வயது 5) என்ற இரு மகன்கள் உள்ளனர் .கணவன்- மனைவிக்குஇடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பன் நேற்று அவரது இரு மகன்களையும் கூட்டிக்கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து பால்த்தாய் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.