கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து டாக்சி டிரைவரிடம் நூதன மோசடி.போலி டாக்டருக்கு வலை…

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமர் மாட்டின் ( வயது 29) இவர் கேரளாவில் உள்ள ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். .அவர் தனது பெயர் பிரவீன் மேனன் (வயது 40) என்றும்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருவதாகவும், கேரள மாநிலம் திருச்சூர் அருகே அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கார் அனுப்பி வையுங்கள் என்று கூறினார். உடனே அந்த கால் டாக்சி நிறுவனம் கார் டிரைவர் அமர் மார்ட்டினை கோவைக்கு அனுப்பி வைத்தது .அதன்படி அமர் மார்ட்டின் கோவை ரேஸ்கோர்ஸ் தனியார் மருத்துவமனை பகுதிக்கு வந்தார். அப்போது காரில் ஏறிய அந்த நபர் பிரவீன் மாரட்டினிடம் சாப்பிட வேண்டும் என்று கூறி ரேஸ்கோர்ஸ் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினார் ஓட்டல் வந்ததும் காரில் இருந்து இறங்கிய பிரவீன் மேனன் தனது வங்கிகணக்கில் பணம் குறைவாக இருப்பதாகவும், “கூகுள் பே”மூலம் ரூ 10 ஆயிரம் அனுப்பினால் உடனே கையில் பணம் தருவதாக கூறியுள்ளார்.மேலும் கார்டிரைவர் அமர்மார்டினிடம் பிரவீன் மேனன் 500 ரூபாய் நோட்டுகள் 20 கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அமர்மராட்டின் பிரவின் மேனன் கூறிய செல்போனின் “கூகுள் பே” மூலம் ரூ 10 ஆயிரம் அனுப்பினார். பிரவீன் மேனன், அமர் மார்ட்டினிடம் செல்போனை வாங்கி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீரென மாயமானார். உடனேஅமர் மார்ட்டின் தேடிப் பார்த்ததும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். .அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது..சந்தேகம் அடைந்த அமர் மார்ட்டின்,போலி டாக்டர் பிரவீன் மேனன் கொடுத்த 500 ரூபாய் நோட்டுக்களை ஓட்டல் நிர்வாகத்துடன் கொடுத்து எந்திரத்தில் போட்டு சோதனை செய்தார். அப்போது அந்த ரூபாய் நோட்டுகளில் 19 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் டாக்டர் என்று கூறிய பிரவீன் மேனன் யார்? கள்ள நோட்டுகளை பழக்கத்தில் விடும் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் அந்த நபரின் உருவம் ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வாடகை கார் டிரைவரைகோவைக்கு வரவழைத்து கள்ள நோட்டுகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.