அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு
அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா c. சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டது . ஹிந்து முன்னணி ஆர் எஸ் எஸ் சேவாபாரதி போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வீடு வீடாக அட்சதையை வழங்கினர் . இதில் தலைமை வகித்த காடேஸ்வரா C. சுப்ரமணியம் அவர்கள் பேசும் போது தமிழகம் முழுக்க ஒரு கோடி வீடுகளை தொடர்பு செய்து இந்த அட்சதையை வழங்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன என்றும் கோவையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இதை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளன்று ஒவ்வொரு வீடுகளிலும் கோலமிட வேண்டும் என்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீராம ஜெயத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் S.சதீஷ் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் சிவக்குமார் முன்னாள் கவுன்சிலர் ஏ டி ராஜன் வணக்கம் கேபிள் பெரியசாமி மற்றும் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.