கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் வாங்கிய கடன் 3,53,561 கோடி ,திமுக ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் வாங்கிய கடன் 2,72,000 கோடி. தமிழகத்தின் அடித்தளம் ஆடி போய் உள்ளது அதை சீர் செய்யநடவடிக்கை எடுக்கவில்லை.விளம்பரத்திற்காகத்தான் உலக முதலீட்டார் மாநாடு. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! 2021 ஆம் ஆண்டு முதல் கடன் சுமை வருகிறது.திமுகஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை.
அம்மாவுடைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட திட்டங்களை எடப்பாடியார் தொடர்ந்து வழங்கினார்.தற்போது திமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, விலையில்லா ஆடு மாடுகள் வழங்குற திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, அம்மா உணவகத்தை இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மூடுகிற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
அம்மா,எடப்பாடியார் ஆட்சி காலங்களில் 17 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சி காலத்தில் புதிதாக 7 சட்டக் கல்லூரிகள், 21 பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள்,4 பொறியியல் கல்லூரிகள், 1102 ஏக்கரில், 1,203 கோடியில், மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா, 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், புதிதாக 248 தொடக்கப் பள்ளிகள், 1079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்வு, 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக உயர்வு, தமிழகத்தின் மின் உற்பத்தியை 32,140 மெகா வாட்டாக உயர்வு, 8,552 மெகாவாட் காற்றாலையில் மின் உற்பத்தி, 1,440 கோடியில் 12 மீன்பிடித் துறைமுகங்கள், 520 கோடியில் 43 இடங்களில் மீன் இறங்கு தளங்கள், இப்படி வளர்ச்சி திட்டங்களை நாம் பட்டியல்யிட்டு கொண்டே செல்லலாம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருந்த நேரத்திலே கூட, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று தொடங்கி வைத்த திட்டம் என்று பார்த்தால் அது பூஜ்ஜியமாகத்தான் நமக்கு விடை கிடைக்கிறது. ஏற்கனவே எடப்பாடியார் தொடங்கி வைத்த திட்டத்தை தான் இவர்கள் இப்போது சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். திமுக ஆட்சி பொறுப்போட்டு 2001முதல் கடன் சுமை ஒப்பிட்டு பார்த்தால் 2021-22 ஆம் ஆண்டில் கடன் தொகை 5,18,796 கோடி, 2022 2023 ஆண்டில் கடன் தொகை 6,30,000 கோடி, 2023 2024 ஆண்டில் கடன் தொகை 7,28,000 கோடியாகும். குறிப்பாக கடந்த பத்தாண்டு கால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் வாங்கிய கடன் 3,53,561 கோடி ,திமுக ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் வாங்கிய கடன் 2,72,000 கோடியாகும்.
அம்மாவின் அரசு விலைவாசி உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் கொரோனா, ஜிஎஸ்டி வரி இழப்பை தாண்டி வாங்கிய கடன் சதவீதம் ஜிடிபி அளவில் 21.22 சகவீதம் தான். ஆனால் சொத்து வரி உயர்த்தி, மின்சார கட்டணத்தை உயர்த்தி இன்றைக்கு விலைவாசியை உயர்த்தி, மக்களை அனைத்து துன்பங்களிலும் ஈடுபடுத்தி எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல், சமூக நலத்திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, எந்தவிதமான கட்டமைப்புகளை உருவாக்காமல் இன்றைக்கு விடியா திமுக அரசின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு வாங்கிய கடன் ஜிடிபி அளவில் 26 சகவீீீீதம் அளவில் வாங்கி உள்ளது. எடப்பாடியார் ஆட்சியில் பொருளாதார மாநிலங்களாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது 15.7 சகவீீத ஜிடிபி பங்களிப்பு கொண்டு மகாராஷ்டிரா முதாவது இடத்திலும், 9.2 சகவீத ஜிடிபி பங்களிப்பை கொண்டு உத்திரபிரதேசம் இரண்டாவது இடத்திலும், 9.1 சகவீத ஜிடிபி பங்களிப்பை கொண்ட தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக 14 இடத்திலிருந்த உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் முன்னேறி உள்ளது.
மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு தாக்குதலை இந்த அரசு கொடுத்திருக்கிறது . விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை, சொத்து வரிஉயர்வு, மின்சார வரி உயர்வு, விலைவாசி உயர்வு என மும்முனை தாக்குதலால் மக்கள் வேதனையின் உச்சமாக உள்ளார்கள். உலக முதலீட்டார்கள் மாநாட்டை நாங்கள் நடத்தப் போகிறோம் என்று விளம்பரத்தை தேடி விளம்பர வெளிச்சத்தால் நடைபெறுகிற ஒரு அரசாங்கமாக இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தின் அடித்தளம் ஆடி கொண்டு இருக்கிறது அதை சீர் செய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய மனநிலையில் இல்லை.
புரட்சித்தலைவி அம்மா உலக முதலீட்டர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 3 லட்சம் கோடி அளவில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை கிடைக்க செய்தார். அதனைத் தொடர்ந்து உலக முதலீட்டர்கள் மாநாடு பிறகு 2019 ஆண்டு 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 52,069 கோடி முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 1,24,829 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்தார். அதேபோல் வெளிநாடு பயணத்தின் போது 41 புரிந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதன் மூலம் 8,835 கோடி முதலீட்டை ஈர்த்து அதன்மூலம் 35,520 வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வரவேற்க யாதும் ஊரே எந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குறிப்பாக கொரோனா காலத்திலும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையாக மாநில திகழ்ந்தது அந்த வரலாற்றை எடப்பாடியார் உருவாக்கினார்.
எவராலும் மறைக்க முடியாது இதையெல்லாம் இந்த அரசு இன்றைக்கு முடி மறைக்க நினைத்தால் தோல்வி தான் பெறும். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க எடப்பாடியார் அயராது உழைத்தார். இன்றைக்கு தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிதி பற்றாக்குறை, இப்படி இருக்கும் நிலையில் தனது தந்தையார் பெயரில் மாவட்டந்தோறும் சிலை வைக்கிறார். கடலில் பேனா, நூலங்கள்,மைதானங்கள், ஜல்லிக்கட்டு திடலுக்கு கருணாநிதி பெயர்களை சூடுகிறார்கள் இப்படியே சென்றால் கருணாநிதி நாடு என்று கூட தமிழகத்தை பெயர் மாற்றம் செய்து விடுவார்கள். இந்த அரசு விளம்பரப்படுத்தி தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டே செல்கிறார்கள் தவிர, அடிப்படை அடித்தளத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சரியான தோல்வியை திமுக பெறுவார்கள் என கூறினார்