நிலம் வரை முறைப்படுத்த ஓய்வு பெற்ற போலீஸ இன்ஸ்பெக்டரிடம் ரூ 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையாளர் உட்பட 3 பேர் கைது…

தாம்பரம் அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன இவருக்கு சொந்தமான நிலம் மற்றும் உறவினருக்கு சொந்தமான நிலம் குன்றத்தூர் நகராட்சி பகுதியில் உள்ளது அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெற குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் முனுசாமி கடந்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார் நிலம் வரன்முறை செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிந்த நில வரன்முறைக்கு ரூ 12 ஆயிரம் வீதம் மூன்று நிலங்களுக்கு ரூ 36 ஆயிரம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர அமைப்பு அலுவலர் பாலசுப்ரமணி பேரம் பேசினார் முடிவில் நகராட்சி ஆணையாளர் குமாரி பாலசுப்பிரமணி உட்கார்ந்து கொண்டு ஓய்வு பெற்ற போலீசை இன்ஸ்பெக்டர் முனுசாமியை அழைத்து உங்களுக்கு வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம் இறுதியாக ரூ 24 ஆயிரத்தை அலுவலக உதவியாளர் குண்டு சாம்சனிடம் கொடுக்கச் சொன்னார்கள் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்ட் கலைச்செல்வனிடம் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் 24 ஆயிரத்தை ரசாயனம் தடவி கொடுத்தனர் அவரும் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் குண்டு சாம்சனி டம் பணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் நகராட்சி கமிஷனர் குமாரி நகர அமைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் அலுவலக உதவியாளர் குண்டு சாம்சன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் குமாரி ஏற்கனவே பல்லாவரம் தாம்பரம் நகராட்சியில் கிளெர்க் ஆக பணியாற்றிய போது லஞ்சம் வாங்குவதில் எக்ஸ்பர்ட் ஆக திகழ்ந்தாராம் மாங்காடு நகராட்சியில் பொறுப்பு கமிஷனராக பணியாற்றிய போது எப்படி லஞ்சம் வாங்க வேண்டும் என்பதை வளைத்து வளைத்து வாங்கினாராம்