பள்ளிவாசலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு…

கோவை போத்தனூர் நஞ்சுண்டபுரம் ரோட்டில் கேரள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ 2500 பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஜமாத் செயலாளர் பிஷால் ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.