கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லப்பாளையம் ஸ்ரீ திருமுருகன் நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கோவை சிவானந்தா காலனி சேர்ந்த அசோக் குமார் ( வயது 48 )நாகை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த சதீஷ் ( வயது 23) சின்னத்துவயலை சேர்ந்த முருகன் ( வயது 68 )ஆகியோர் கட்டிட வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக வீடு கட்டும் வேலை நடக்கவில்லை இதனால் பாலகிருஷ்ணன் கட்டிடம் கட்டி உள்ள பகுதிக்கு தண்ணீர் ஊற்ற தினமும் வந்து செல்வார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றார். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது .எந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை அவர் பார்த்த போது ஒரு பகுதியில் ஒரு நபரின் கை மட்டும் பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது. அதை பார்த்த பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அன்னூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நித்தியா, சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது அங்கு ஒருவரை கொலை செய்து மண்ணில் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த இடத்தை தோண்டி உடலை வெளியே எடுக்க போலீசார் முடிவு செய்தனர். தாசில்தார் காந்திமதி மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த நபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் உடலை மருத்துவ குழுவினர் அங்கே பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது இறந்த நபரின் தலையில் காயங்கள் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த நபரின் உடலை புதைக்கப்பட்ட இடத்தின் அருகே தடயங்கள் ஏதாவது உள்ளதா? என ஆய்வு செய்தனர்.ஆனால் எதுவும் கிடைக்கவில்லை அத்துடன் கொலை செய்யப்பட்டது ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கோவை சிவானந்தா காலணியை சேர்ந்த அசோக் குமார் என்பது தெரிய வந்தது. எனவே அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டனர். அதில் பாலகிருஷ்ணன் கட்டிடடம் கட்டி வரும் பகுதியில் வேலை செய்து வந்த சதீஷ், முருகைபன் ஆகியோர் சேர்ந்து அசோக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது .இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சதீசை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அசோக் குமாரை கொலை செய்து புதைத்த பின்னர் சதீஷ் ஊட்டிக்கு தப்பி சென்றார். இந்த நிலையில் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் :என பயந்த அவர் நேற்று முன் தினம் ஊட்டி லவ்டேல் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் தொடர்புடைய முருகையன் நாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து தனிப்படை போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். பின்னர் அங்கு ஒருபகுதியில் மறைந்திருந்த முருகையனை போலீசார் நேற்று கைது செய்து அன்னூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்..இவர்கள் 3 பேரும் தினமும் மாலையில் ஒன்றாக இருந்து மது அருந்துவார்களாம். கடத்த 16ஆம் தேதி 3 பேரும் மது அருந்தி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில்கடப்பாரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
கோவை அருகே கடப்பாரையால் அடித்து தொழிலாளி கொலை…
