கோவை என்.எச். ரோடு , ஜமேதார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரண்யா தேவிநேற்றுஇவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டனர் .இதேபோலவெள்ள கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி, இவர் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதை யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். கோவை சிவானந்த காலனியை சேர்ந்தவர் யோகராஜ் ( வயது 26) இவரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த இவரதுபைக்கையாரோ திருடி விட்டனர். இதே போல குமரன் என்பவர் ரெட் பீல்டில் ரோட்டில் உள்ள விமானப்படை மருத்துவமனை முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்அதையும் காணவில்லை..கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் ( வயது 29) இவர் அங்குள்ள கடை முன் தனது பைக்கை நிறுத்திருந்தார். அதை யாரோ திருடி விட்டனர் .இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.கோவையில் ஒரே நாளில் 5 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் ஒரே நாளில் 5 இருசக்கர வாகனம் திருட்டு,..
