வால்பாறை – அக்காமலை எஸ்டேட் பகுதியில் புதிதாக போடப்பட்ட உயரமான தார் சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கான்கிரீட் தளம் அமைத்து சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் டீத்தூள் கடை முதல் அக்காமலை எஸ்டேட் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வால்பாறை நகராட்சி மூலம் குறுகிய தார் சாலையை மறுசீரமைக்கும்பணி சுமார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் மதிப்பில் நடைபெற்றது இப்பணியால் சாலையின் இரு ஓரங்களிலும் ஏற்ப்பட்டுள்ள குழிகளால் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் இருசக்கர வாகனம் முதல் எந்த ஒரு வாகனத்திற்கும் வழி விட முடியாத அளவிற்கு வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது இந்நிலையில் அவசரகாலங்களில் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் பெரும சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு குறுகிய உயரமான தார் புதிய சாலையின் இரு ஓரப்பகுதிகளிலும் காங்கிரீட் தளம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்