கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மனைவி தற்கொலை…

கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மாவுத்தம்பதி முருகன் பதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், இவரது மனைவி கார்த்திகா( வயது 26) இவர்களுக்கு 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவர் தினேஷ்குமார் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்தார். அந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவி கார்த்திகா நேற்றுவீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது தந்தை ராஜன் கே. ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.