கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறி பாளையம், அரசம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 78)விவசாயி. இவரது மனைவி வசந்தா (வயது 77) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சண்முகம் தனது சொத்துக்களை மகள் பெயரில் எழுதி வைத்துவிட்டார். இதனால் மனைவி வசந்தாவுக்கும் ,கணவர் சண்முகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது..இந்த நிலையில்வாழ்க்கையில் வெறுப்படைந்த வசந்தா நேற்று அவரது வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொண்டார். அதே இடத்தில்உடல் கருகி இறந்தார். இதுகுறித்து கணவர் சண்முகம் செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.