9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தினர்…

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கனவே கடந்த மாதம் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அரசு பேசவில்லை. அதேபோன்று காலியாக இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிட்டத்தட்ட 20000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அதேபோன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் ஒப்பந்த அடிப்படையில் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.

இதற்கான பேச்சுவார்த்தை 27ஆம் தேதி கடந்த மாதமும், அதே போல தற்பொழுதும் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது. ஆனால் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அரசு எந்தவிதமான உறுதியும் அளிக்கவில்லை. இரண்டு முறை பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோதும் எந்த உத்தரவாதமும் தமிழக அரசு வழங்கவில்லை என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக சிஐடியூ,ஏஐடியூசி ,ஹெச்எம்எஸ்  உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் தனியாகவும், அதேபோன்று அண்ணா தொழிற்சங்க பேரவை ஏற்கனவே தனியாக வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள்.

எனவே வரக்கூடிய 9ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். சற்று நேரத்துக்கு முன்னதாக தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழில் நல ஆணையம், அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக இருந்த தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவு எதும் ஏற்படாத காரணத்தால் வரக்கூடிய ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்கள்