நீலகிரி மாவட்ட உதகை தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் புத்தாண்டு 2024 வரவேற்கும் விதமாக இரவு ஆடல் பாடல் சிறப்பு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன , நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது, புத்தாண்டு வரவேற்கும் நிகழ்ச்சி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் அரசு துறை அதிகாரிகள், கலந்து கொண்டனர், சுற்றுலாத்துறை மக்கள், மற்றும் உதகை பல பகுதிகளில் இருந்து தொழில் அதிபர்கள் பொதுமக்கள் குடும்பங்கள் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர், விழா நிகழ்ச்சியில் பிரபலமான பாடல்கள் கலை நிகழ்ச்சிகள், என்டர்டெயின்மென்ட் விளையாட்டுப் போட்டிகள், என பல ஆர்வமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன, மற்றும் அரும்சுவை உணவு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, இதில் அனைவரும் கலந்து கொண்டு சுவைத்து மகிழ்ந்தனர்,
புத்தாண்டு நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார், புத்தாண்டு 2024 வரவேற்கும் விதமாக பிரபலமான பாடல்கள் இசையுடன் சுற்றுலா மக்கள் மட்டும் பொதுமக்கள் இசையுடன் நடனம் ஆடி மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேர்த்தனர், இரவு 12 மணி அளவில் புத்தாண்டு வரவேற்பு பாடல்கள் உடன் நடனம் ஆடி, கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர், விழா நிறைவாக அனைவருக்கும் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் மற்றும் நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,