கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம்’ தில்லைநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 72) இவர் நேற்று ஒண்டிப்புதூரில் இருந்து வடவள்ளிக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.மருதமலை ரோட்டில் விவசாய பல்கலைக்கழகம், 4 -வது கேட்அருகே பஸ் வந்தபோது ஓடும் பஸ் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார் .இது தொடர்பாக சூலூர் சூலக்கல் பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் செந்தில்குமார் ( வயது 40) ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கண்டக்டர் தீபக் குமார் (வயது 30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு…
