கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த முதியவர் – வாலிபர் கைது…

கோவை மாவட்டம் கோட்டூர்பக்கமுள்ள சமத்தூர் பஸ் ஸ்டாப் அருகே கோட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக சின்னம்பாளையம் ராஜ்நகரை சேர்ந்த ராமசாமி (வயது 74) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 14 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது. இதே போல பெரியநாயக்கன்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா அங்குள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்றதாக சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (வயது 26)கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து பில் புக்’ லாட்டரி டிக்கெட் விற்ற பணம் ரூ 12,720 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.