கோவையில் நிதி நிறுவனம் நடத்தி 1.50 கோடி மோசடி. .கட்டிட காண்ட்ராக்டர் கைது…

கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் முத்துக்குமார் ( வயது 35) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இவர்கள் 2பேரும் தங்கள் நிறுவனத்தில் ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் 18 சதவீதம் வட்டி தருவதாகவும் ரூ2 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீதம் வட்டி தருவதாகவும் அறிவித்தனர். இதனை நம்பி பலரும் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் பணத்தையும் வட்டியையும் இவர்கள் திருப்பிதரவில்லை. இதில் 5 பேரிடம் மட்டும் சுமார் ரூ 1 கோடி 50 லட்சம் மோசடி செய்ததாக தெரிகிறது .இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மத்திய பகுதி குற்றபிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் முத்துக்குமாரைதேடி வந்தனர். இந்த நிலையில்இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர் அம்சவேணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் .இந்த நிலையில் தலை மறைவாக இருந்த மற்றொரு பங்குதாரரான முத்துக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி, கூட்டு சதி உட்பட பல்வேறு பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.