கோவையில் ஊர்க்காவல் படை பிரதேச தளபதி, துணை பிரதேச தளபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி  ஆகிய பதவிகள் முறையே 28.02.2025 மற்றும் 04.03.2025 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கௌரவ பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர்பதவி வகிப்பவர்கள், பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி பதவிகளில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் விண்ணப்பிக்கலாம். பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தினை சுய விவரக் குறிப்புடன் நேரடியாக கோவை மாவட்ட காவல் அலுவலகத்திலோ அல்லது “காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்” என்ற முகவரிக்கு 21.02.2025-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கலாம் ..