மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம் அல்லது மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தின் நிலையை பிரத்யேக இணையதளத்தில் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் . அதேபோல் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி புதியவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒரு கோடி பேருக்கு தான் உரிமைத்தொகை என்ற எவ்வித இலக்குகளும் இல்லை என தெரிவித்துள்ள தமிழக அரசு, அக்டோபர் 18-ம் தேதித்துக்குள் ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.