மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!!
இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். இந்நிலையில் சமீப காலமாக மேற்கத்திய கலாச்சார மோகத்தில் நமது இளைஞர்களை அடிமையாக்கி சீரழித்து வரும் நிகழ்வுகள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது.
நமது முன்னோர்கள் காலத்தில் குடும்ப வழக்குகள் என்பது அதிக அளவில் இருந்து இல்லை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு இறுதி வரை ஒன்றாக வாழ்ந்து மறைந்தது உண்டு. தற்பொழுது வளர்ந்து வரும் மேற்கத்திய மோகத்தினால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து அதிக அளவில் குடும்ப நீதிமன்றங்களுக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது.
இது சமூக ஆர்வலர்கள் கூறும் போது:-
நாடு முழுவதும் குடும்ப நல நீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் அமைப்புடன் கோவை மாநகராட்சி இணைந்து வாரந்தோறும் மகிழ்ச்சி சாலை (Happy Street) என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ரேஸ் கோர்ஸ் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள், இளைஞர்கள் பாரம்பரியம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது, நமது பாரம்பரிய கலைகளை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது வரவேற்பு தக்க ஒன்றாக இருக்கிறது, ஆனால் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சாலைகளில் ஆண்களுடன் இணைந்து பெண்கள் குத்தாட்டம் ஆடுவது வேதனைக்குரிய விஷயமாக இருப்பதாகவும், இதனால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு இளைஞரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.