இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..

கோவை ரத்தினபுரி, மேஸ்திரி மாரப்பன் வீதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவரது மனைவி சோனாலி ( வயது 28 )இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சால்வையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அவரது தாயார் லட்சுமி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.