கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் முத்துவேல். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ2 ஆயிரத்தை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சூலூரைச் சேர்ந்த ரஞ்சித் ( வயது 21) என்பவரை கைது செய்தனர்.