கோவை சூலூர் பக்கம் உள்ள சங்கோதி பாளையம் எல்..அன்.டி பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக லாரி மற்றும் வாகனங்களில் செல்பவர்களிடம் கஞ்சா விற்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமார் (வயது 20) என்பது தெரியவந்தது .இவர் தற்போது தென்னம்பாளையத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.