21 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது – 7 பேருக்கு வலைவீச்சு..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் , சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் நேற்று சின்னவேடம்பட்டி, ஏரி பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்த சோதனை செய்தனர். அவரிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணை அவர் சின்ன வேடம்பட்டி அஞ்சுகம் நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த மயில்வாகனன் மகன் மனோஜ் குமார் என்ற மாரி மனோஜ் குமார் ( வயது 22)என்பது தெரிய வந்தது .இந்த கஞ்சா  கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக காமராஜபுரம் கௌதம், அஸ்வின், சிவா என்ற பாபு, ரவீந்திரன் சுஜிமோகன், எஸ். ஆர் .பி. சிவா ஜெர்மன் ராகேஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்..