கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் ஆகியோர் நேற்று மாலை குறிச்சி, வெங்கடாசலபதி நகர்,பகுதி உள்ள ஒரு சர்ச் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் போத்தனூர் என்.பி. இட்டேரி, குறிச்சி பிரிவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் (வயது 29)என்பது தெரிய வந்தது. இவர் தற்போது போத்தனூர், மைல்கல் பாரதி நகர் பகுதியில் தங்கி இருந்து மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததாராம்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.