கோவை சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி செக்யூரிட்டி சூப்பர்வைசர் ரூபன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில் பிணமாக மிதந்தவர் ஒண்டிப்புதூரை சேர்ந்த விஷ்வா ( வயது 18) என்பது தெரிய வந்தது .இவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது..
கோவை வாலாங் குளத்தில் இளைஞர் சடலம் மீட்பு..
