கோவையைச் சேர்ந்தவர் அனாஸ் அகமது (வயது 22) யூடியூப்பர். இவர் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலருக்கு பர்தா அணிவித்து உங்களுக்கு பர்தா அணிந்தால் நன்றாக இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் .இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனாஸ் அகமதுவை கைது செய்தனர். நடைபாதையில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களை இடையூறு செய்து இது போன்ற வீடியோ எடுக்க கூடாது என்றும், அதை மீறி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.